அசாஃபா பவலுக்கு 18 மாத கால போட்டித் தடை

அசாஃபா பவலுக்கு 18 மாத கால போட்டித் தடை

அசாஃபா பவலுக்கு 18 மாத கால போட்டித் தடை

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2014 | 2:10 pm

உலகின் மிக வேகமான மனிதர் என முன்னர் அறியப்பட்டிருந்த தடகள வீரர் அசாஃபா பவலுக்கு 18 மாத போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஊக்க  மருந்தை அவர் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டதை அடுத்து  அவர் மீதான இந்தத் தடையை ஜமைக்கா நாட்டு அதிகாரிகள் விதித்துள்ளனர்.

31 வயதான பவல் ஜமைக்கா தேசியத் தடகளப் போட்டிகளின் போது தடை செய்யப்பட்டுள்ள இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தம்மீது  விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து அசாஃபா பவல் விளையாட்டுத் துறைக்கான உயர்நீதிமன்றத்தில்  மேன்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை  தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியமை நிரூபனமாகியுள்ளதால்  ஜமைக்க வீரரான ஷெரோன் சிம்ஸனுக்கும் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்