மாகாண சபைத் தேர்தல் குறித்த முறைப்பாடுகள்; விசாரணைகள் ஆரம்பம்

மாகாண சபைத் தேர்தல் குறித்த முறைப்பாடுகள்; விசாரணைகள் ஆரம்பம்

மாகாண சபைத் தேர்தல் குறித்த முறைப்பாடுகள்; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 7:40 am

அண்மையில் நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களின்போது, முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

11 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்ஜிஹேவா தெரிவிக்கின்றார்.

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராகவே அனைத்து முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்ட செயலாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்ஜிஹேவா மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்