மஹேந்திர சிங் தோனி அளித்த வாக்குமூலம்; நாளை விசாரணைக்கு

மஹேந்திர சிங் தோனி அளித்த வாக்குமூலம்; நாளை விசாரணைக்கு

மஹேந்திர சிங் தோனி அளித்த வாக்குமூலம்; நாளை விசாரணைக்கு

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 10:28 am

இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்த குழு முன்னிலையில் மஹேந்திர சிங் தோனி உள்ளிட்ட மூவர் அளித்த வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வது தொடர்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மஹேந்திர சிங் தோனி, ஐ.பி.எல் போட்டிகளுக்கான சிரேஷ்ட நடவடிக்கை அதிகாரி சுந்தர் ராமன் மற்றும் அப்போதைய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் என் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் வாக்குமூல ஒலிப் பதிவுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கோரியுள்ளது.

இந்திய உச்ச நீதிமன்றம் நாளைய தினம் இந்த விடயத்தை பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் ஆட்டநிர்ணயம் தொடர்பில் இறுதியாக வழக்கு விசாரணை நடைபெற்றபோது வாக்குமூலப் பதிவுகளை கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மனுத் தாக்கல் செய்திருந்தது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி என் ஸ்ரீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பனுடன் இணைந்து மஹேந்திர சிங் தோனியும் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்