மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்ய இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்ய இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்ய இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 7:26 am

பண்டிகை காலப்பகுதியில் மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை இன்று முதல் முன்னெடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் பிரிவுகளின் கீழ், எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

பண்டிகை காலத்தில் மதுபோதையில் வாகனங்களை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதே இதன் நோக்கம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்