நயன்தாரா – ஹன்சிகா போட்டி அதிகரிப்பு

நயன்தாரா – ஹன்சிகா போட்டி அதிகரிப்பு

நயன்தாரா – ஹன்சிகா போட்டி அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2014 | 4:39 pm

சிறிய இடைவெளியின் பின்னர் நயன்தாரா மீண்டும் நடிக்க வந்த போது அவரது மீள்வருகை குறித்து எந்த நடிகைகளுக்கும் அவ்வளவாக பயம் இருக்கவில்லை.

இரண்டு மூன்று படங்களில் நயன்தாரா நடிப்பார், பின்னர் காணாமல் போய்விடுவார் என அவர்கள் நினைத்தார்கள்.

எனினும், நயன்தாரா நடித்த ஆரம்பம், ராஜாராணி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது செல்வாக்கு மீண்டும் அதிகரித்துள்ளது.

இதனால் சிம்பு, ஜெயம்ரவி போன்ற இளம் கதாநாயகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இந்நிலையில், நயன்தாரா அடுத்த முன்னணி நடிகையாகி விடுவாரோ என்கிற அச்சம் ஹன்சிகா, காஜல்அகர்வால் உள்ளிட்ட நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நயன்தாராவின் வரவினால் அதிகம் பாதிக்கப்பட்டவர் ஹன்சிகாதான். அவர் நடிக்க வேண்டிய ஓரிரு படங்களின் வாய்ப்பு நயன்தாராவிற்கு கிடைத்துள்ளமை நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

சிம்புவின் காதலை நிராகரித்த அதே வேகத்தில் சில முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களின் வாய்ப்பை ஹன்சிகா பெறமுயற்சித்ததுடன் அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.

தற்போது அவர் நடித்துள்ள மான்கராத்தே வெற்றி பெற்றிருப்பதால் ஹன்சிகாவின் பட வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

இந்த சூழ்நிலையில், தனது காதலரான சிம்புவை தன்னிடமிருந்து பிரித்த நயன்தாராவுக்கு தகுந்த பாடம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஹன்சிகா, அவர் பேசிக்கொண்டிருக்கும் சில படங்களை தன் பக்கம் திருப்பும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளாராம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்