தோழியை மணந்தார் ஆவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிரெட் லீ

தோழியை மணந்தார் ஆவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிரெட் லீ

தோழியை மணந்தார் ஆவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிரெட் லீ

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 8:25 am

ஆவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ தனது தோழி லேனா எண்டர்சனை திருமணம் செய்து கொண்டார்.

188298-6b284750-113e-11e3-bfe4-e8fe552df053

இந்தத் திருமணம் நகரை அடுத்த சீபோர்த்தில் உள்ள பிரெட் லீயின் புதிய வீட்டில் கடந்த வார இறுதியில் நடைபெற்றுள்ளது. பிரெட் லீக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். முன்னதாக எலிசபெத்கெம்ப் என்பவரை திருமணம் செய்திருந்த பிரெட் லீ, 2008யில் அவரை விவா கரத்து செய்தார். இவர்களுக்கு பிரெஸ்டன் என்ற மகன் உள்ளார்.

416561-brett-lee

37 வயதாகும் பிரெட் லீயும், 29 வயதான லேனாவும் கடந்த ஒகஸ்ட் முதலே ஒன்றாக சுற்றித் திரிந்தனர். மேலும் நிதி திரட்டும் நிகழ்ச்சியொன்றின்போது ஒன்றாகக் கலந்துகொண்ட இவர்கள், இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த திருமணத்திற்கு ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் பிரெட் லீயை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்