தான் திருமணமானவர் என்பதை பகிரங்கப்படுத்தியுள்ளார் நரேந்திர மோடி

தான் திருமணமானவர் என்பதை பகிரங்கப்படுத்தியுள்ளார் நரேந்திர மோடி

தான் திருமணமானவர் என்பதை பகிரங்கப்படுத்தியுள்ளார் நரேந்திர மோடி

எழுத்தாளர் Bella Dalima

10 Apr, 2014 | 4:29 pm

தான் திருமணமானவர் என்பதை முதற்தடவையாக பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார் நரேந்திர மோடி.

பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி, இந்திய மக்களவைத் தேர்தலில் போட்டியிட வதோதராவில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தான் திருமணமானவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என அவர் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நரேந்திர மோடி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும், வேட்பு மனு விண்ணப்பத்தில் திருமணம் குறித்த இடத்தை பூர்த்தி செய்யாமலேயே விட்டிருந்தார்.

முதல் முறையாக தான் திருமணம் ஆனவர் என்றும், மனைவியின் பெயரையும் அவர் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது திருமணம் தொடர்பான கட்டத்தை பூர்த்தி செய்யவேண்டும் என்று கோவா மாநில காங்கிரஸ் எம்.பி. சாந்தாராம் நாயக் கோரியிருந்தார்.

இந்நிலையில், மோடி முதல் முறையாக தனது மனைவி பற்றிய தகவலை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியிலும் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்