ஜெயலலிதா பிரதமராவது கடவுளின் கட்டளை – மதுரை ஆதீனம்

ஜெயலலிதா பிரதமராவது கடவுளின் கட்டளை – மதுரை ஆதீனம்

ஜெயலலிதா பிரதமராவது கடவுளின் கட்டளை – மதுரை ஆதீனம்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 7:51 pm

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராவது உறுதியென, அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் ஜாதக நிலை அப்படி எனவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனம் நிகழ்வொன்றில் ஆற்றிய உரை
”நாட்டை காப்பாற்ற மேடையேறி பிர்சாரம் செய்கிறேன். யாரை பிரதமராக கொண்டுவர வேண்டும் என்கிற பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர்தான் பிரதமராக வர வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக உள்ளது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆற்றல் மிக்க, எழுச்சிமிக்க தலைவியாகத் திகழ்கிறார் ஜெயலலிதா. உலகில் துணிச்சல் மிக்க பெண்மணிகளில் ஒருவர் இவர்.”

”மம்தா, பட்நாயக், மாயாவதி, சந்திரபாபு நாயுடுன்னு எல்லாரும் நீங்க பிரதமர் நாற்காலியில் உட்காருங்கன்னு சொல்லப் போறாங்க. ஜெயலலிதா பிரதமரானதும் நதிகள் தேசியமயமாக்கப்படும், விலைவாசி குறையும், பெற்ரோல் விலை குறையும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். மீண்டும் அதிமுக வெற்றி விழாவில் சந்திப்போம் என்றார் மதுரை ஆதீனம்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்