சிறுவனை கடத்தி கப்பம் பெற முயன்றவர்கள் கைது

சிறுவனை கடத்தி கப்பம் பெற முயன்றவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 7:24 pm

சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த மூன்று சந்தேகநபர்கள் வத்தளை ஹுனுபிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாளிகாவத்தை தேசிய தொடர்மாடிக் குடியிருப்பில் வசித்துவரும் சிறுவன் நேற்று பிற்பகல் மாலை நேர வகுப்பில் கலந்துகொண்டு வீடுதிரும்பிய சந்தர்ப்பத்தில் கடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பின்னர் சிறுவனின் தந்தையுடன் தொலைபேசியில் உரையாடிய சந்தேகநபகர்கள் 30 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளனர்.

இது தொடர்பில் சிறுவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய கப்பத்தை பெறுவதற்கு முயற்சித்தபோது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து வத்தளை ஹுனுபிட்டிய ரயில் நிலையம் அருகிலுள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவன் மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வீட்டை சந்தேகநபர்கள் வாடகைக்கு பெற்றிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்