சானியா மிர்ஸா சொயிப் மலிக் உறவில் விரிசலா? (Photos)

சானியா மிர்ஸா சொயிப் மலிக் உறவில் விரிசலா? (Photos)

சானியா மிர்ஸா சொயிப் மலிக் உறவில் விரிசலா? (Photos)

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 5:24 pm

தனது கணவர் சொயிப் மலிக்குடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லையென சானியா மிர்ஸா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் மலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இவர்களது திருமணம் 2010 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சானியா மிர்ஸா தொடர்ந்து இந்தியாவிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். சொயிப் மலிக் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறார்.

இந்த நிலையில் இவர்கள் இடையே நெருக்கம் குறைந்து வருவதாகவும், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை சானியா மிர்ஸா திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ள சானியா மிர்ஸா அங்கு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டடுள்ளார்.

[quote]எங்களது திருமண வாழ்க்கை எளிதானது அல்ல. ஏனெனில் இருவரும் வெவ்வேறு நாட்டை சேர்ந்த, தொழில்முறை விளையாட்டு வீரர்கள். நாங்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதற்கு போதுமான நேரம் கிடைக்காது என்பதை அறிவேன். ஆனால் இதுவரை அந்த நிலைமையை முடிந்தவரை சிறப்பாக கையாண்டு வருகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆனாலும், சொயிப் மலிக்கை நான் இன்னும் அதிகமாக நேசிக்கிறேன் என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த கட்ட போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு கணவருடன் ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்வதற்காக மாமனார் வீடு உள்ள பாகிஸ்தான் வந்துள்ளேன். மீடியாக்களின் தொந்தரவு இல்லாததால் இங்கு ஜாலியாக நேரத்தை செலவிட்டு வருகிறேன். ஆசை தீர சாப்பிடுகிறேன். ஷொப்பிங் சென்று மனதுக்கு பிடித்ததை வாங்குகிறேன். ஒரு முறை கடைவீதிக்கு சென்ற போது, ஒரு கடைக்காரருக்கு முதலில் நான் சானியா தானா? என்று ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு எனது கணவருடன் என்னை பார்த்த பிறகு, அடையாளம் கண்டு என்னிடம் ஆட்டோகிராப் வாங்கினார். புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.[/quote]

Shoaib-Malik-And-Sania-Mirza

Sania Shoaib Reception Sania Mirza with Shoaib Malik Wedding Pics

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்