கோச்சடையான் வெளியீட்டு திகதியில் மாற்றம்!

கோச்சடையான் வெளியீட்டு திகதியில் மாற்றம்!

கோச்சடையான் வெளியீட்டு திகதியில் மாற்றம்!

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 11:09 am

முதன் முறையாக மோஷன் கெப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கிறது ‘கோச்சடையான்’.

இந்த படம் இன்னைக்கு வரும், நாளைக்கு வருதம் என ஊடகங்களே ஒரு திகதியை எழுதிக் கொண்டிருக்க, நேற்றைய தகவல் படி உழைப்பாளர் தினம் மற்றும் தல அஜித்தின் பிறந்தநாளுமான மே 1 ஆம் திகதியில் வெளியாகவுள்ளது என செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.

kochadaiyaan_fl002

ஆனால் இப்போது திடீர் திருப்பமாக படத்தை மே 9ஆம் திகதி வெளியிட இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இது 100% உறுதிப்படுத்தப்பட்ட செய்தி எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், இந்தி, தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட 9 மொழிகளில் உலகம் முழுவதும் 3,850 திரையரங்குகளில் கோச்சடையான் வெளியிடப்படுகிறது. இது, உலகம் முழுவதும் ஜாக்கிசான் படங்களுக்கு கிடைத்த திரையரங்குகளை விட எண்ணிக்கையில் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

கோச்சடையான் வெளியாகும் நாள் குறித்த அறிவிப்பு, வரும் வெள்ளிக்கிழமை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வெளியிட முடிவு செய்யப்படுள்ளது.

ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட்ட பலர் நடிப்பில், மோஷன் கெப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கிறது ‘கோச்சடையான்’.

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மீடியா ஒன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தினை ஈரோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்திருந்தாலும், படத்தின் முதல் பிரதியை தயார் செய்ய இயக்குநர் செளந்தர்யா சீனா சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்