கெக்கிராவயில் வாகன விபத்து; தாய் மற்றும் மகன் உயிரிழப்பு

கெக்கிராவயில் வாகன விபத்து; தாய் மற்றும் மகன் உயிரிழப்பு

கெக்கிராவயில் வாகன விபத்து; தாய் மற்றும் மகன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 1:44 pm

கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன், லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 48 வயதான தாய் மற்றும் 21 வயதான மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையை பார்த்துவிட்டு, வீடு திரும்புக்கொண்டிருந்தபோது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்