கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை; வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 6:16 pm

நிர்ணய விலையை பொருட்படுத்தாது கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்த 123 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கின்போது இந்த வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் நேற்று நள்ளிரவு முதல் அரசி வகைகளுக்கான நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோகிராம் சம்பா அரிசிக்கான நிர்ணய விலை 77 ரூபாவாகவும், நாட்டரிசி, சிவப்பு மற்றும் வெள்ளை பச்சையரிசிக்கான நிர்ணய விலை 60 ரூபாவாகவும் அமைந்துள்ளது.

பண்டிகை காலத்தில் வர்த்தகர்கள் ஏதேச்சையான முறையில் அரிசி விலைகளை அதிகரித்து நுகர்வோரை சிரமத்திற்கு உள்ளாக்குவதை தடுக்கும் வகையில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

அரசியை பதுக்கி வைத்து சந்தையில் அரிசி தட்டுப்பாட்டினை உருவாக்குவதற்கு எவரேனும் முயற்சித்தால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது

அரசி போன்றே ஏனைய உணவு வகைகளின் விலைகள் குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்துவதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்