கரையோர ரயில் ​சேவைகள் பாதிப்பு

கரையோர ரயில் ​சேவைகள் பாதிப்பு

கரையோர ரயில் ​சேவைகள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 10:10 am

சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால், கரையோர ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளவத்தை மற்றும் கொழும்பு – கோட்டை இடையிலான பகுதியில் சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

இதனால், கரையோர ரயில் போக்குவரத்து தாமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

சமிக்ஞை கட்டமைப்பினை திருத்தி, ரயில் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டுவருவதற்கு தொழில்நுட்பவியலாளர்கள் குழுக்கள் சில ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்