இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 9:06 am

நாட்டின் சில மாவட்டங்களில் மிருகங்களின் இறைச்சி மற்றும் அதன் உற்பத்திகளை கொண்டுசெல்லுதல், உணவாக உட்கொள்ளுதல் மற்றும் இறைச்சி விற்பனை ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

மிருகங்களின் வாய் மற்றும் கால்களில் ஏற்பட்ட நோய்த்தாக்கம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் குமார டி சில்வா தெரிவிக்கின்றார்.

இதற்கான உத்தரவுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளதாக கால்நடை வளர்ப்பு மற்றும் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.

முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், அம்பாறை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்த தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்