இந்திய மக்களவைத் தேர்தல்; தமிழகத்தில் 845 வேட்பாளர்கள்

இந்திய மக்களவைத் தேர்தல்; தமிழகத்தில் 845 வேட்பாளர்கள்

இந்திய மக்களவைத் தேர்தல்; தமிழகத்தில் 845 வேட்பாளர்கள்

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 12:18 pm

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பட்சமாக தென் சென்னையில் 42 பேரும் குறைந்த பட்சமாக நாகபட்டினம் தனித் தொகுதியில் 9 பேரும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஆறாவது கட்டமாக எதிர்வரும் 24 ஆம் திகதி வாக்குப் பதிவு இடம்பெறவுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் திகதி நிறைவடைந்திருந்தது.

39 தொகுதிகளிலும் 1261 பேர் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்