இந்திய மக்களவைத் தேர்தலில் மூன்றாம்கட்ட வாக்குப் பதிவு இன்று

இந்திய மக்களவைத் தேர்தலில் மூன்றாம்கட்ட வாக்குப் பதிவு இன்று

இந்திய மக்களவைத் தேர்தலில் மூன்றாம்கட்ட வாக்குப் பதிவு இன்று

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 8:06 am

இந்திய மக்களவைத் தேர்தலில் மூன்றாம்கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறவுள்ளது.

டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களிலுள்ள 91 தேர்தல் தொகுதிகளில் இன்றைய தினம் வாக்குப் பதிவு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழாம் திகதி ஆரம்பித்த இந்திய மக்களவைத் தேர்தல் ஒன்பது கட்டங்களாக அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

814 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

கடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அதிகளவு வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஆம் ஆத்மி கட்சி, பிரதான கட்சிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளது.

பிராந்தியத்தில் பல்வேறு சிறிய கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில், கட்சியொன்று பெரும்பான்மையை பெறாதவிடத்து, அரசாங்கத்தை அமைப்பதில் சிறிய கட்சிகள் முக்கிய இடத்தினைப் பெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

543 ஆசனங்களைக் கொண்ட மக்களவையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சி அல்லது கூட்டணி ஒன்றுக்கு குறைந்தது 272 ஆசனங்களை கைப்பற்றவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் எதிர்கட்சி பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதலமைச்சருமான நரேந்திர மோடி இந்த தேர்தலில் வெற்றிபெறுவார் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்