அமெரிக்காவிலுள்ள பாடசாலையில் கத்திக் குத்து; 22 பேருக்கு பாதிப்பு

அமெரிக்காவிலுள்ள பாடசாலையில் கத்திக் குத்து; 22 பேருக்கு பாதிப்பு

அமெரிக்காவிலுள்ள பாடசாலையில் கத்திக் குத்து; 22 பேருக்கு பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Apr, 2014 | 12:43 pm

அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள உயர் நிலை பாடசாலையொன்றில் 22 பேர் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர்.

இரண்டு கத்திகள் மற்றும் ஆயுதத்துடன் பாடசாலைக்குள் புகுந்த ஒருவர் 21 மாணவர்களையும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பில் 16 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஆட்கொலை தொடர்பில் நான்கு பிரிவுகளிலும் தாக்குதல் தொடர்பில் 21 பிரிவுகளிலும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

14 வயது மாணவர்களே கத்துக் குத்து காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அனைவரும் காப்பற்றப்பட்டுள்ளனர்.

எனினும் இந்தச் சம்பவத்திற்கான இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்