25 சதம் நாணயத்தைக்கொண்டு யார் இறந்தார்கள் என்பதை அரசாங்கம் கூற முடியும் – சின்னத்தம்பி பாஸ்கரா

25 சதம் நாணயத்தைக்கொண்டு யார் இறந்தார்கள் என்பதை அரசாங்கம் கூற முடியும் – சின்னத்தம்பி பாஸ்கரா

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2014 | 9:44 pm

தமிழ் மக்களுக்கான உண்மையான நல்லிணக்தை ஏற்படுத்தும் நடைமுறைகளை அரசாங்கம் பின்பற்றுவதில்லையென ஜனநாயக மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் ஊடக செயலாளர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஐனநாயக மக்கள் முன்னணியின்  ஊடக செயலாளர் சின்னத்தம்பி பாஸ்கரா தெரிவிக்கையில், ” 16 தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமை தொடர்பில் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டிய காலம் இது. நல்லிணக்கம் , நல்லிணக்கம் என்று அரசாங்கம் வாய் மொழி மூலம் சொல்லிக் கொண்டிருக்கிறதே தவிர, அந்த நல்லிணக்கத்திற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான சமிக்ஞையையும் காணவில்லை. நாடு கடந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் அமைப்புக்கள், தமிழர்கள் பட்ட நியாயமான துன்பங்களை வெளிக்கொண்டு வரும் இந்த நேரத்தில்,  அரசாங்கம் கண்ட ஜெனீவாவின் மூக்குடைவின் பின் அதற்கு ஒரு பழிவாங்கும் படலமாக, இந்த தமிழ் அமைப்புக்களின் நியாயமான அகிம்சாவழியான செயற்பாடுகளை முடக்குவதைப் பார்கின்றோம்,” என்றார்.

அத்துடன், மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

[quote]தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்கள பணிப்பாளர் கூறினார் அது ஒரு மயானம் என்று. எப்படி மயானமாக இருக்க முடியும்? என்ன ஆதாரங்கள் இருக்கின்றன? ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோவிலுக்கு பக்கத்தில் மயானம் இருக்குமா? அப்படி மயானம் இருந்தாலும் இந்துக்கள் ஒருநாளும் புதைக்கமாட்டார்கள், எரிப்பார்கள். அப்படி இருக்கும் போது இதை மயானம் என்றிருக்கின்றார்கள்[/quote] என்றார்.

ஐனநாயக மக்கள் முன்னணியின்  ஊடக செயலாளர் மேலும் தெரிவித்ததாவது;

” 1982 ஆம் அண்டு பாவிக்கப்பட்ட ஒரு 25 சதம் அந்த மனிதப் புதைகுழியில் இருந்ததாக அரசாங்கம் கூறியிருக்கின்றது.   அந்த 1982 ஆம் அண்டு அச்சிடப்பட்தாக நாணயம் இருந்தால் தீர்க்கமாக யார் இறந்தவர்கள் என்பதை அரசாங்கம் கூறமுடியும்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்