விசாரணைகளை எதிர்கொள்ள இலங்கை சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்றுக்கொள்க

விசாரணைகளை எதிர்கொள்ள இலங்கை சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்றுக்கொள்க

விசாரணைகளை எதிர்கொள்ள இலங்கை சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்றுக்கொள்க

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2014 | 8:20 pm

உலக நாடுகளில் இருக்கின்ற  இலங்கையைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளை எதிர்நோக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தானும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

“விசாரணைகளின் போது நாம் ஒத்துழைப்பதில்லை என்று அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் நேற்று தெரிவித்திருந்தார். அதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஐ.நாவின் அதிகாரியான யாஸ்மின் சூகாவும் கருத்துத் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகின்றேன். நாம் எந்த இலக்கைக்கொண்டிருந்தாலும் எமது நாட்டின் மீது தடைகள் விதிக்கப்பட்டால் நாம் இலக்குகளை மாற்ற வேண்டும். எவ்வாறான தடைகள் விதிக்கப்படும் என்று அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.  இதற்கு ஏதும் திட்டங்கள் இருக்கின்றதா என்று இந்த அரசாங்கத்திடம் கேட்கின்றோம்,” என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத் அமுனுகம, “சுயகௌரவம் உள்ள நாடு என்ற வகையில் கொள்கை ரீதியான தீர்மானமாகும் என்று நாம் மட்டுமல்ல இந்தியாவும் கூறியது.  எனவே, இங்கு கொள்கைத் திட்டமொன்று காணப்படுகின்றது,” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

“தற்போது சர்வதேச அளவில் பிரபல்யம் அடைந்த இலங்கை சட்டத்தரணிகள் இருக்கின்றனர். டெஸ்மன் டி சில்வா, கிரிஸ்ட் வீரமன்த்ரி, லக்ஷ்மன் மாரசிங்க ஆகியோரின் ஒத்துழைப்புக்களுடன் இந்த பிரச்சினையை எதிர்நோக்க வேண்டும். இந்த சாட்சிகளை உடைப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த சாட்சிகள் தீர்ப்பாக மாறும். ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்படாது என்று நீங்கள் ஆரம்பத்தில் கூறினீர்கள். அவர்களுக்கு இலங்கைக்கு எதிரான பிரேரணை தேவையில்லை என்று ஜீ. எல் பீரிஸ் கூறினார்.

மூன்று வருடங்கள் தொடர்ந்து பிரேரணை கொண்டுவரப்பட்டது. இது குற்றச்சாட்டு மாத்திரம் தான் ஆனாலும் உங்களுடைய பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுத்தததாக அமையும் என்று நான் கருதுகின்றேன். நாட்டையும் இராணுவத்தையும் அசௌகரியப்படுத்தாமல் இதற்கு முன்னிற்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அதற்கு நாமும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்,” என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்