யுவராஜ் சிங்கை ஊடகங்களே விமர்சிக்கின்றன; கம்பீர் குற்றச்சாட்டு

யுவராஜ் சிங்கை ஊடகங்களே விமர்சிக்கின்றன; கம்பீர் குற்றச்சாட்டு

யுவராஜ் சிங்கை ஊடகங்களே விமர்சிக்கின்றன; கம்பீர் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2014 | 1:26 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் திறமையை வெளிப்படுத்த தவறியமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் யுவராஜ்சிங்கிற்கு  அணியின் சகவீரர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

நட்ச்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரும் யுவராஜ்சிங்கிற்கு ஆதரவு வழங்கிய நிலையில், அந்த பட்டியலில் தற்போது கௌதம் கம்பீரும் இணைந்துள்ளார்.

கிரிக்கட் போட்டிகளில் இந்திய அணியை வெற்றியை நோக்கி வழிநடத்திச் செல்வதில் யுவராஜ்சிங்கிற்கு இணை அவரே என கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதேவேளை எந்த சக வீரரும் யுவராஜ் சிங்கை விமர்சிக்கவில்லை எனவும் ஊடகங்களே அவரை விமர்சித்து வருவதாகவும் கம்பீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒரு அணியின் வெற்றியிலும் தோல்வியிலும் அனைத்து வீரர்களுக்கும் பங்குள்ளதாக தெரவித்துள்ள கம்பீர், இதனால் அணியின் ஒரு வீரரரை மாத்திரம் குற்றஞ்சுமத்துவது முறையல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணியுடனான  இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங் 21 பந்துகளில் 11 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதால், தோல்விக்கு அவரே காரணமென விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்