யாழ். வட்டுக்கோட்டை கிரிக்கெட் போட்டியின் போதான கொலை; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். வட்டுக்கோட்டை கிரிக்கெட் போட்டியின் போதான கொலை; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். வட்டுக்கோட்டை கிரிக்கெட் போட்டியின் போதான கொலை; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2014 | 12:28 pm

யாழ். வட்டுக்கோட்டையில் அண்மையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது இளைஞன் ஒருவன் அடித்து கொல்லப்பட்டமை தொடர்பில் கைதான 08 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தொடர்ந்தும் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டுக்கோட்டை மைதானத்தில் கடந்த மாதம் 15 ஆம் திகதி பிரபல பாடசாலைகள் இரண்டிற்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய பாடசாலையொன்றின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்