துவண்டுபோயுள்ள யுவராஜ் சிங்கிற்கு திரையுலகம் ஆதரவுக்கரம்

துவண்டுபோயுள்ள யுவராஜ் சிங்கிற்கு திரையுலகம் ஆதரவுக்கரம்

துவண்டுபோயுள்ள யுவராஜ் சிங்கிற்கு திரையுலகம் ஆதரவுக்கரம்

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2014 | 2:06 pm

இலங்கைக்கு எதிரான இருபதிற்கு-20 உலகக் கிண்ண இறுதி போட்டியில் திறமையை வெளிப்படுத்த தவறிய யுவராஜுக்கு, பொலிவுட் திரையுலகம் உலகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இறுதிப் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிற போதிலும் தமது நாட்டு அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதே பெருமை அளிக்கிறது என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

அந்த நாள் தமக்கு சாதகமாக அமையவில்லை என்றும் சிறந்த அணி வெற்றி பெறுவது இயல்பு என்ற அடிப்படையில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கைக்கு வாழ்த்துகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுவராஜ் சிங் புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டே உலகக் கிண்ணத்தை வென்று இந்தியர்களை மகிழ்வித்தாகவும் அதனை எப்படி மக்கள் மறந்து போயுள்ளனர் என நினைக்கையில் வருத்தமாக உள்ளதெனவும் நடிகர் வருண் தவன் தெரிவித்துள்ளார்.

”ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்ததற்காக யுவராஜ் வீட்டில் கல் வீசிய அந்த முட்டாள்கள் யார்? யுவராஜ் நமக்கு இரண்டு உலகக் கோப்பைகள் வென்று தந்ததை மறந்து விட்டோமா?” என இயக்குனர் மாதுர் பண்டர்கர் கூறியுள்ளார்.

“மோசமாக தோற்று விட்டோம். அதற்காக, யுவராஜ் வீட்டைத் தாக்குவது வெட்கமளிக்கும் செயல்” என கட்டுரையாளர் ஷோபா வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை அணியுடனான  இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங் 21 பந்துகளில் 11 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதால், தோல்விக்கு அவரே காரணமென விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்