சில அரச சேவை பிரிவுகளுக்கான எமது உத்தரவுகள் ”செவிட்டு யானைகளுக்காக வீணை வாசிப்பதை” போன்றது

சில அரச சேவை பிரிவுகளுக்கான எமது உத்தரவுகள் ”செவிட்டு யானைகளுக்காக வீணை வாசிப்பதை” போன்றது

சில அரச சேவை பிரிவுகளுக்கான எமது உத்தரவுகள் ”செவிட்டு யானைகளுக்காக வீணை வாசிப்பதை” போன்றது

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2014 | 12:11 pm

பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக நீர்ப்பாசன திணைக்களம் தற்போது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

நீர்பாசன திணைக்கள பொறியியலாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் போதே அமைச்சர் நேற்று இதனைக் கூறினார்.

[quote]எமது நாட்டின் நிர்வாக சேவையின் பழைய சட்ட திட்டங்கள் மற்றும் செயற்றிறன் இன்மை ஆகியன சிறந்த சாட்சிகளாகும். எமது நீர்பாசன திணைக்களத்திற்கு 135 பொறியியலாளர்களுக்கான தேவை காணப்பட்ட போதிலும், 17 பேரை மாத்திரம் நியமிப்பதற்கு பொறியியலாளர் சபைக்கு இரண்டு வருட காலம் சென்றது. ஆசியாவின் அதிசயமாக மாறும் இலங்கையின் பயணத்தின் போது, பொறியியலாளர் சபை ஆமையை போன்று செயற்படுகின்றது. மஹிந்த சிந்தனை எதிர்கால பயணம் மற்றும் திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் நாம் ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டும். அரச சேவையின் சில பிரிவுகளுக்கு நாம் எதனை கூறினாலும், செவிட்டு யானைகளுக்காக வீணை வாசிப்பதை போன்றே காணப்படுவார்கள். பொறியியலாளர் சபையிடம் 25 தடவைகளுக்கும் அதிகமாக தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி இந்த பிரச்சினை குறித்து பேசியிருப்போம். பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றன. அதனால் நீர்பாசன திணைக்களம் தற்போது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளது.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்