உள்நாட்டுக் கலைஞர்களின் நடிப்பில் உருவாகியுள்ள “ஜீவன்” விரைவில் சக்தி தொலைக்காட்சியில்…

உள்நாட்டுக் கலைஞர்களின் நடிப்பில் உருவாகியுள்ள “ஜீவன்” விரைவில் சக்தி தொலைக்காட்சியில்…

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2014 | 5:06 pm

சக்தி தொலைக்காட்சியின் தயாரிப்பில் உருவாகியுள்ள “ஜீவன்” தொடர் நாடகம் மே 3ஆம் திகதி முதல்  ஔிபரப்பாகவுள்ளது.

முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள “ஜீவன்” தொடர்நாடகம் எதிர்வரும் காலங்களில் தொலைக்காட்சி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது.

சக்தி தொலைக்காட்சியின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்நாடகம் ஆத்மா பற்றிய சுவாரஷ்யமான கதையை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது.

இந்நாடகத்தின் கதாநாயகனாக, கார்த்திக் எனும் கதாப்பாத்திரத்தில் சக்தி நிகழ்ச்சித்தொகுப்பாளர் சுகைலும் கதாநாயகியாக ரம்யா எனும் கதாப்பாத்திரத்தில் நர்மதாவும் நடிக்கின்றனர்.

சி.சுதர்ஷனின் இசையில், விஜய் தொலைக்காட்சியின் எயார்டெல் சூப்பர்சிங்கர் புகழ் பின்னணிப்பாடகர் சத்திய பிரகாஷ் இந்நாடகத்திற்கான அறிமுகப் பாடலைப் பாடியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புதிய தொடர்நாடகமாக ஔிபரப்பாகவுள்ள நிலையில், முதலாவது தொடராக ஜொலிக்கவுள்ள “ஜீவன்” இலங்கைத் தொலைக்காட்சி வரலாற்றில் புதியதொரு தடத்தைப் பதித்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்