இலங்கைத் தமிழர்களை கொச்சைப்படுத்திய லிங்குசாமியின் படத்திற்கு பாடல் எழுதமாட்டேன் – கவிஞர் அறிவுமதி

இலங்கைத் தமிழர்களை கொச்சைப்படுத்திய லிங்குசாமியின் படத்திற்கு பாடல் எழுதமாட்டேன் – கவிஞர் அறிவுமதி

இலங்கைத் தமிழர்களை கொச்சைப்படுத்திய லிங்குசாமியின் படத்திற்கு பாடல் எழுதமாட்டேன் – கவிஞர் அறிவுமதி

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2014 | 2:41 pm

நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் அஞ்சான் திரைப்படத்தில் இயக்குனர் லிங்குசாமி தற்போது மும்முரமாக உள்ளார்.

இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமியும் கவிஞர் அறிவுமதியும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் லிங்குசாமியின் பல திரைப்படங்களுக்கு கவிஞர் அறிவுமதி பாடல்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஞ்சான் திரைப்படத்திற்கு பாடல் எழுதுமாறு லிங்குசாமி விடுத்த கோரிக்கையை கவிஞர் அறிவுமதி நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தமிழர்களை கொச்சைபடுத்தும் வகையில் திரைப்படம் தயாரித்த லிங்குசாமியின் படத்தில் பணிபுரிய தாம் விரும்பவில்லை என கவிஞர் அறிவுமதி கூறியுள்ளார்.

அத்துடன் இனம் திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவன், அஞ்சான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிவதால் அவர் பணிபுரியும் படத்திற்கு தான்னால் பாடல் எழுத முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனால் அஞ்சான் திரைப்படத்திற்காக பாடல் எழுதுவதற்காக அனுப்பிய மெட்டை திருப்பி அனுப்பி தனது கோபத்தை அறிவுமதி வெளிப்படுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்