இறால் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

இறால் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

இறால் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2014 | 1:10 pm

இறால் ஏற்றுமதியை இந்த ஆண்டு 48 ஆயிரம் மெற்றிக் தொன்னாக அதிகரிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2012 ஆம் ஆண்டை விட 2013 ஆம் ஆண்டு இறால் ஏற்றுமதி சுமார் 25 ஆயிரம் மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் மூலம் 30 மில்லியன் ரூபா நாட்டிற்கு வருமானமாக கிடைத்தாகவும் கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளினால் கடந்த ஆண்டை விட இறால் ஏற்றுமதி 100 சதவீதமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்