அரசு மாடுகள் ஊடாக உழவுத் தொழிலை செய்ய முற்படுகின்றதா? பாராளுமன்றத்தில் ஜே.ஶ்ரீரங்கா கேள்வி

அரசு மாடுகள் ஊடாக உழவுத் தொழிலை செய்ய முற்படுகின்றதா? பாராளுமன்றத்தில் ஜே.ஶ்ரீரங்கா கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2014 | 9:51 pm

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லையென பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே. ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08) உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

“உணவுத் தட்டுப்பாடுகள் வராமல் எப்படி விவசாயத்துறையை முன்னேற்ற முடியும் என்பதை நோக்கி  சர்வதேச நாடுகள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இன்றும் உழவியந்திரங்களுக்கும் வரியொன்றைக் கொண்டுவரும் நிலைமை காணப்படுகின்றது.

துரதிர்ஷ்டவசமாக விவசாயிகளின் வரிகள் இன்று அதிகரிக்கப்படுகின்றன.  அரசு மீண்டும் பழைய காலத்திற்குச் சென்று மாடுகளை வளர்த்து மாடுகள் ஊடாக உழவுத் தொழிலை செய்ய முற்படுகின்றதா? அல்லது நவீன உலகில் இந்த உழவியந்திரங்களுக்கு வரிகளை சுமத்துவதன் ஊடாக எதனை எதிர்பார்க்கிறது?

உண்மையில் லக்சரி பென்னுக்கம் லக்சரி டையிற்கும்  அல்ல வரி விலக்குத் தேவை. விவசாயிகளுக்குத்தான் வரிவிலக்குத் தேவை. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகின்றபோது விவசாயிகள் உழவியந்திரங்களை வாங்குவது குறைந்திருக்கின்றது,” என்றார் பாராளுமன்ற உறுப்பினர் ஜே ஸ்ரீ ரங்கா.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்