அரசாங்கம் கையகப்படுத்திய சீனித் தொழிற்சாலைகளில் 1486 மில்லியன் ரூபா இலாபம்

அரசாங்கம் கையகப்படுத்திய சீனித் தொழிற்சாலைகளில் 1486 மில்லியன் ரூபா இலாபம்

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2014 | 8:37 pm

செவனகல மற்றும் பெலவத்த சீனி தொழிற்சாலைகளை அரசாங்கம் கையகப்படுத்திய பின்னர் 1486 மில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது.

அதன்  20 வீதத்தை ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் கொடுப்பனவாகப் பகிர்ந்தளிக்கும் வைபவம் இன்று (09)ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.

செவனகல சீனித் தொழிற்சாலையின் மைதானத்தில் இந்த வைபவம் நடைபெற்றது.

2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட இந்த தொழிற்சாலைகளை கடந்த சில வருடங்களில் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற முடிந்தமை ஓர் வெற்றியென ஜனாதிபதி இங்கு கூறினார்.

[quote]இந்தத் தொழிற்சாலைகள் நட்டம் அடைந்து வந்தன.  அதன் காரணமாக இந்தத் தொழிற்சாலைகளை கையகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்தது. அவ்வாறு எமது பொறுப்பில் ஏற்று 2 வருடங்களும் 6 மாதங்களும் நிறைவடைகையில் அதனை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளோம்.  ஊடகமும் இந்த செய்தியை பகிரங்கப்படுத்த வேண்டும்.  இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு.  நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் சொத்துக்களை இழக்கவில்லை. தனியார்மயப்படுத்தலுக்கு நாம் எதிர்ப்புத்தெரிவித்தோம் [/quote]

என்றார் ஜனாதிபதி.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்