வௌ்ளவத்தை – கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதி ஒரு வழிப் பாதையாக மாற்றம்

வௌ்ளவத்தை – கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதி ஒரு வழிப் பாதையாக மாற்றம்

வௌ்ளவத்தை – கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதி ஒரு வழிப் பாதையாக மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 7:54 am

காலி வீதியில் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி இடையே வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதால், இன்றுமுதல் காலை 7 மணிமுதல் 9 மணிவரை கடற்கரை வீதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியின் திருத்தப் பணிகள் நிறைவடையும் வரையில், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் அதிகளவு வாகன நெரிசல் ஏற்படுவதனைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, இராமகிருஷ்ண வீதியில் இருந்து கின்ரோஸ் வீதி வரையில் வெள்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான மார்க்கத்தில் ஒருவழிப் போக்குவரத்து இடம்பெறுமென பொலிஸார் கூறினர்.

வெள்ளவத்தை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் டுப்ளிகேஷன் வீதியை மாத்திரமே போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எனவே, விசேட போக்குவரத்து திட்டத்தினை உரியமுறையில் பின்பற்றுமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்