விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்கிறார் ஜீ.எல்.பீரிஸ்

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்கிறார் ஜீ.எல்.பீரிஸ்

விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்கிறார் ஜீ.எல்.பீரிஸ்

எழுத்தாளர் Bella Dalima

08 Apr, 2014 | 8:03 pm

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இலங்கை எவ்வித ஒத்துழைப்புகளையும் வழங்காது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் உள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்ததாவது;

“மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு நாங்கள் எவ்வித ஒத்துழைப்புகளையும் வழங்கப் போவதில்லை. இதற்கான காரணம் யாதெனில், ஆணையாளருக்கு இந்த விசாரணைக்கான அதிகாரம் கிடையாது என்பதனை நாங்கள் உறுதிப்படக் கூறுகின்றோம்.

ஒரு நாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பது ஆணையாளர் அலுவலக வரைபுக்குள் உள்வாங்கப்படாது. ஆணையாளரின் அதிகாரத்திற்கும் உட்படாத விடயமாகும். இது தொடர்பில் நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஏதேனும் விசாரணை முன்னெடுப்பதாயின் அதனை முன்னெடுப்பவர் குறித்த விடயம் தொடர்பில் வெளிப்படையாகக் காணப்பட வேண்டும். ஊகங்களில் நிலைகொள்ளாது சுயாதீனமான சிந்தனையுடன் செயற்பட வேண்டும்.

இதுஅனைத்து விசாரணைகளுக்குமான சர்வதேச அங்கீகாரமாகும். ஆகவே இந்த விடயத்தில் எம்மால் திருப்திகொள்ள முடியாது,” என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்