வட மாகாண மாணவர் மத்தியில் மது பாவனை; குற்றச்சாட்டு உண்மையானதா?

வட மாகாண மாணவர் மத்தியில் மது பாவனை; குற்றச்சாட்டு உண்மையானதா?

எழுத்தாளர் Bella Dalima

08 Apr, 2014 | 10:14 pm

யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் வட மாகாணத்தில் கல்வி நிலைமையில் முன்னேற்றம் காணப்படுகின்றது.

என்றாலும், மாணவர்கள் மத்தியில் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டிலிருந்து மாணவர்களை மீட்டெடுப்பதற்காக ஆசிரியர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களினால் பல்வேறு வகையான தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு வழங்கப்படுகின்ற தண்டனைகளினால் மாணவர்கள் உடல் மற்றும் உள ரீதியில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாவதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

மாணவர்களுக்கு தண்டனை வழங்குதல் தொடர்பில் பல்வேறு சட்டங்கள் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற இந்த நடவடிக்கைகள் சரியானவையா?

மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்