ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 12:15 pm

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மேலும் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவம் மற்றும் வர்த்தக பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கே இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்த்தன குறிப்பிட்டார்.

கடந்த 29 ஆம் திகதி இறுதியாண்டு மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஐந்து வாரங்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்