மீண்டும் கன்னத்தில் அறையப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால் (வீடியோ)

மீண்டும் கன்னத்தில் அறையப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால் (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

08 Apr, 2014 | 3:00 pm

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களில் இரண்டாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில் அறையப்பட்டுள்ளார்.

தேர்தல் களத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சுல்தான்புரியில் கெஜ்ரிவால் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்த அவரது கன்னத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் திடீரென அறைந்துள்ளார்.

உடனடியாக அந்த நபரை ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து தாக்கினர். அரவிந்த்கெஜ்ரிவாலை அறைந்தவரும் ஆம் ஆத்மி தொப்பி அணிந்திருந்தார்.

சம்பவத்திற்குப் பின்னர் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த கெஜ்ரிவால், “பிரதமர் பதவியை அடைய ஏன் சிலர் வன்முறையைக் கடைபிடிக்கிறார்கள் என தெரியவில்லை. வன்முறையால் எங்களை கட்டுப்படுத்த முடியும் என நினைக்காதீர்கள். கடைசி மூச்சு வரை போராடுவோம்” என்றார்.

கெஜ்ரிவால் மீது இதற்கு முன்னர் பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த வாரம் 4 ஆம் திகதி டெல்லி தக்‌ஷினாபுரியில் 19 வயது இளைஞர் ஒருவர் இவரைத் தாக்கினார்.

மார்ச் 28 ஆம் திகதி ஹரியானாவில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அண்ணா ஹசாரே ஆதரவாளர் தாக்கினார்.

வாரணாசியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ‘மை’ வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்