மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதம்; தேடுதல் பணி தொடர்கிறது

மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதம்; தேடுதல் பணி தொடர்கிறது

மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஒரு மாதம்; தேடுதல் பணி தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 2:03 pm

வானில் மாயமான மலேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டியை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அவுஸ்ரேலிய கடற்படைக் கப்பல் ஒன்றுக்கு விமானப் பதிவுக் கருவிகளிலிருந்து எழுப்பப்படுவதாக கருதப்படும் சில சமிக்ஞைகள் கிடைத்துள்ளன..

ஓஷன் ஷீல்ட் எனும் அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பலுக்கு, இந்து சமுத்திரத்தின் தென்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு 1,000 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பரப்பிலிருந்து சமிக்கைஞைகள் கிடைத்துள்ளன.

இந்த சமிக்ஞை காணாமல்போன மலேஷிய விமானத்தின் கறுப்பு பெட்டியினுடையதா என்பதை உறுதிசெய்வதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

கறுப்பு பெட்டியிலிருந்து வெளியாகும்  மின்சக்தி விரைவில் காலாவதியாகும் நிலையை எட்டியுள்ளதாக ஊகிக்கும் அவுஸ்திரேலிய கடற்படையினர் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மலேஷியாவின் எம் எச் 370 விமானம் காணாமற் போய் இன்றுடன் ஒரு மாத காலமாகின்றது.

இந்த விமானத்தில் பயணித்த 227 பேரில் 150ற்கும் அதிகமானோர் சீனப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விமானத்தில் பயணித்த சீன பிரஜைகளின்  உறவினர்கள் இன்று சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணாமல்போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகளிலும்   14 கப்பல்களும் 14 விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்