போராடி விமர்சனங்களை பொய்யாக்கும் வலிமை யுவராஜுக்கு உள்ளது – சச்சின்

போராடி விமர்சனங்களை பொய்யாக்கும் வலிமை யுவராஜுக்கு உள்ளது – சச்சின்

போராடி விமர்சனங்களை பொய்யாக்கும் வலிமை யுவராஜுக்கு உள்ளது – சச்சின்

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 9:54 am

இருபதுக்கு-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோல்வியடைந்தது.

இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக பல ரசிகர்கள் யுவராஜ் சிங்கின் மோசமான ஆட்டத்தை காரணம் காட்டினர்.

ஊடகங்களும் அவ்வாறே செய்திகளை வெளியிட்டன. இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் யுவராஜுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

பேஸ்புக்கில் சச்சின் தெரிவித்த கருத்தின் தமிழாக்கம்
[quote]அடுத்த நொடியை கணிக்க இயலாத தன்மையே கிரிக்கெட்டை ஒரு பரபரப்பான விளையாட்டாக மாற்றுகிறது. நாங்கள் சிறப்பாக செயற்படும்போது வரும் ரசிகர்களின் கைதட்டலை கிரிக்கெட் வீரர்களாக மகிழ்கிறோம். ஆனால், அதைவிட நாங்கள் கஷ்டப்படும்போது ரசிகர்கள் தரும் ஆதரவையும் உற்சாகத்தையுமே அதிகம் மதிக்கிறோம்.யுவராஜ் சிங் 2007ஆம் ஆண்டு நடந்த இருபதுக்கு-20 உலகக் கிண்ண போட்டியில் படைத்த சாதனையிலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் அவரது பங்களிப்பூடான வெற்றியிலும் நாம் அனைவரும் பெருமையடைந்தோம்.யுவராஜுக்கு நேற்று முன்தினம் ஒரு தினமாக அமைந்தது. அதற்கு அவரை விமர்சிக்கலாம். ஆனால், அதற்காக அவரை சிலுவையில் ஏற்றவோ, திறைமயற்றவராக நினைத்தலோ கூடாது. கிரிக்கெட் விளையாட்டிலும், விளையாட்டைத் தாண்டியும் பல தடைகளைத் தாண்டி வந்துள்ள யுவராஜின் மன தைரியத்தைக் கண்டு நான் வியந்துள்ளேன். மீண்டும் கண்டிப்பாக இந்தத் தடைகளை எதிர்த்துப் போராடி, தன் மீதுள்ள விமர்சனங்களை பொய்யாக்கும் வலிமையும் திறனும் யுவராஜுக்கு உள்ளது என்பதை நான் அறிவேன். யுவி, பல இனிமையான நினைவுகளில் உங்களின் பங்கை, ஒரு கசப்பான தினம் குறைத்துவிட முடியாது.[/quote]

 

zz
சச்சின் டென்டுல்கர் பேஸ்புக்கில் வௌியிட்ட கருத்து


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்