புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய நந்தகோபனிடம் தொடர்ந்து விசாரணை

புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய நந்தகோபனிடம் தொடர்ந்து விசாரணை

புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய நந்தகோபனிடம் தொடர்ந்து விசாரணை

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 1:38 pm

மலேஷியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேகநபரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக்காவலின் கீழ், சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றியவரும், உறுப்பினருமான நந்தகோபன் என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அண்மையில் கைதுசெய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி, வெளிநாடொன்றுக்கு செல்வதற்கு முயற்சித்த போது, மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டு, ஆறு மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த நந்தகோபன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

யுத்தகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் இலங்கையில் கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பில் நந்தகோபனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்