நாட்டை வந்தடைந்தார் பாகிஸ்தான் கூட்டு இராணுவத் தளபதி

நாட்டை வந்தடைந்தார் பாகிஸ்தான் கூட்டு இராணுவத் தளபதி

நாட்டை வந்தடைந்தார் பாகிஸ்தான் கூட்டு இராணுவத் தளபதி

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 9:16 am

பாகிஸ்தானின் கூட்டு இராணுவத் தளபதி ஜெனரல் ரஷாட் மஹ்மூத் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளார்.

ஜெனரல் ரஷாட் மஹ்மூத் உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு 9 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் தெரிவிக்கின்றார்.

பாகிஸ்தான் கூட்டு இராணுவத் தளபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் மஹ்மூத் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ பிரதானிகளை சந்தித்து பாகிஸ்தானின் கூட்டு இராணுவத் தளபதி கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிற்கும் பாகிஸ்தானின் கூட்டு இராணுவத் தளபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்