நந்திதா தாஸிற்கு யேல் ஃபெல்லோ விருது

நந்திதா தாஸிற்கு யேல் ஃபெல்லோ விருது

நந்திதா தாஸிற்கு யேல் ஃபெல்லோ விருது

எழுத்தாளர் Bella Dalima

08 Apr, 2014 | 3:15 pm

2014 ஆம் ஆண்டுக்கான யேல் ஃபெல்லோ விருது, பிரபல நடிகை நந்திதா தாஸ் மற்றும் காத்ரெஜ் இந்திய கலாசார மையத்தின் தலைவர் பர்மேஷ் ஷஹானி ஆகிய இரு இந்தியர்களுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் நடுநிலை சிந்தனையாளர்களைத் தேர்வு செய்து ‘யேல் ஃபெல்லோ’ விருதுகள் வழங்கப்படுகின்றன.

பிறக்கும் குழந்தை இறப்பு விகிதம், பாலின ரீதியான வேறுபாடு, இனவாத பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை என்று பல பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டதற்காக நந்திதா தாஸுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இம்முறை இத்தாலியின் ரோபோடிக் ஆய்வாளர், பாகிஸ்தான் வழக்கறிஞர், சிரியாவுக்கான அமைதி தூதர் என உலக அளவில் 15 பேர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

யேல் பல்கலைக்கழகம் வழங்கும் இந்த விருது நடுநிலை சிந்தனையாளர்கள்,தெளிவான நற்சிந்தனை போக்குடன் செயல்படும் நபர்களுக்கு வருடம் தோறும் வழங்கப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் யேல் விருது பட்டியலில் இதுவரை இந்தியர்களே அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்