தங்கமலை சந்தியில் பஸ் விபத்து; பெண் பலி

தங்கமலை சந்தியில் பஸ் விபத்து; பெண் பலி

தங்கமலை சந்தியில் பஸ் விபத்து; பெண் பலி

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 12:06 pm

ஹப்புத்தளை, தங்கமலை சந்தியில் தனியார் பஸ்சொன்றில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஹப்புத்தளையில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்று மோதி காலை 8.30 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் தியத்தலாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தங்கமலை தோட்டத்தை சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்