சென்னைக்கு தங்கத்தை கடத்த முயன்றவர் கைது

சென்னைக்கு தங்கத்தை கடத்த முயன்றவர் கைது

சென்னைக்கு தங்கத்தை கடத்த முயன்றவர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 12:22 pm

சட்டவிரோதமாக ஒருதொகை தங்கத்தை இந்தியாவின் சென்னைக்கு கொண்டுசெல்வதற்கு முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மூன்று பைக்கற்றுக்களில் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட 12,85,000 ரூபா பெறுமதியான தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த ஒருவரே சட்டவிரோதமான முறையில் தங்கத்தை சென்னைக்கு கொண்டுசெல்ல முயற்சித்துள்ளதாக லெஸ்லி காமினி மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்