கொலவெறி அனிருத்திற்கு முதல் ஏமாற்றம்!

கொலவெறி அனிருத்திற்கு முதல் ஏமாற்றம்!

கொலவெறி அனிருத்திற்கு முதல் ஏமாற்றம்!

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 11:19 am

‘3’ திரைப்படத்தில், வை திஸ் கொலவெறி என்ற வெற்றி பாடலை வழங்கி ஒரே பாடலில் புகழின் உச்சத்துக்கு சென்றவர் இசையமைப்பாளர் அனிருத்.

அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், இப்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி, விஜய்யின் கத்தி ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே கெளதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் விஜய் -அஜித் என முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைக்க சந்தர்ப்பம் கிடைத்ததால் சில சிறிய பட்ஜெட் படங்களை அனிருத் தவிர்த்து வந்தார்.

எனினும் அஜித்தின் திரைப்படம் அனிருத்திற்கு கைநழுவிப்போய் விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது முதல் படமான மின்னலே முதல் தான் இயக்கிய பல திரைப்படங்களில் ஹரிஸ் ஜெயராஜ் பல வெற்றி பாடல்களை கொடுத்தவர் என்பதால் தீவிரமாக சிந்தித்த கெளதம்மேனன், அஜித்துடனான ஆலோசனைக்கு பின்னர் ஹரிஸ் ஜெயராஜ் தனது படத்திற்கு இசையமைப்பதாக அறிவித்திருக்கிறார்.

இது அனிருத்துக்கு இது பெரிய ஏமாற்றமாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்