ஏப்ரல் 12 அமலா பால் – ஏ.எல்.விஜய் திருமணம்?

ஏப்ரல் 12 அமலா பால் – ஏ.எல்.விஜய் திருமணம்?

ஏப்ரல் 12 அமலா பால் – ஏ.எல்.விஜய் திருமணம்?

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 11:57 am

சினிமா வட்டாரத்தில் இயகுனர்களுடன் நடிகைகள் காதல் வசப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அந்த காதல் கல்யாணத்தில் முடிகிறதா?

அந்த வரிசையில் கூடிய விரைவில் இணைய போகும் ஜோடி-இயக்குனர் ஏ.எல்.விஜய் – அமலபால்.

‘தெய்வத் திருமகள்’, ‘தாண்டவம்’, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும், நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும், இருவரும் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமலேயே இருந்தனர்.

இதை அவ்வப்போது உறுதிப்படுத்தும் விதமாக, தான் இயக்கும் படங்களில் அமலாபாலை நடிக்க வைத்தார் ஏ.எல்.விஜய். இந்நிலையில், அமலாபாலும், ஏ.எல்.விஜய்யும் ஜுன் 12ஆம் திகதி திருமணம் செய்துகொள்ளப் போவதாக கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பாக செய்தி உலாவி கொண்டிருக்கிறது.

இதுகுறித்து விரைவில் இருவரும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இயக்குனர் விஜய்யின் ‘சைவம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட நடிகர் பார்த்திபன் நாசுக்காக அவர்களின் காதலை பற்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்