உலக சாம்பியன்களை வரவேற்கும் விசேட நிகழ்வு, சம்பியன்ஸ் நெட்வேர்க்ஸில் நேரடி ஒலி/ஔிபரப்பு

உலக சாம்பியன்களை வரவேற்கும் விசேட நிகழ்வு, சம்பியன்ஸ் நெட்வேர்க்ஸில் நேரடி ஒலி/ஔிபரப்பு

உலக சாம்பியன்களை வரவேற்கும் விசேட நிகழ்வு, சம்பியன்ஸ் நெட்வேர்க்ஸில் நேரடி ஒலி/ஔிபரப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 7:18 am

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கையின் வெற்றி வீரர்கள் இன்று மாலை 3 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளனர்.

இவர்களை வரவேற்க விமான நிலையத்தில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், விசேட அதிதிகளுக்கான பிரிவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலும் வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் பேரணியாக இலங்கை வீரர்கள் அழைத்துவரப்படவுள்ளனர்.

சீதுவ, ஜாஎல, கந்தான, மஹபாகே, ஹெந்தலை, வத்தளை, பேலியகொட,  ஊடாக காலி முகத்திடலுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

வீரர்கள் அழைத்து வரப்படும்போது வீதியின் இரு மருங்கிலும் இருந்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து காலிமுகத்திடலில் ஒன்றுகூடுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

முதற்தடவையாக இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை வீரர்களின் வருகை தொடர்பிலான அனைத்து தகவல்களையும் சம்பியன்ஸ் நெட்வேர்க்ஸ், நியுஸ் பெஸ்ட் – எம்.ரீ.வி/எம்பீ.சி ஊடக வலையமைப்பின் அனைத்து அலைவரிசை ஊடாகவும் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.

இதேவேளை, http://newsfirst.lk/english/ என்ற எமது இணையத்தளத்தினூடாகவும் நேரடியாக பார்வையிட முடியும்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்