உலக அணியின் தலைவராக தோனி நியமனம்; மாலிங்கவிற்கும் வாய்ப்பு

உலக அணியின் தலைவராக தோனி நியமனம்; மாலிங்கவிற்கும் வாய்ப்பு

உலக அணியின் தலைவராக தோனி நியமனம்; மாலிங்கவிற்கும் வாய்ப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 7:03 am

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக இருபதுக்கு-20 கிரிக்கெட் அணியின் தலைவராக இந்திய அணியின் மஹேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில் இந்திய அணி வீரர்கள் நால்வரும், தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் தலா இரண்டு வீரர்களும், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளில் தலா ஒரு வீரரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பாவான்களான வசீம் அக்ரம், நஸார் ஹூசைன் மற்றும் டேவிட் பூன் தலைமையிலான நிபுணர்கள் குழுவினால் இந்த வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரை மாத்திரம் கருத்திற்கொண்டு, இந்த அணி தெரிவுசெய்யப்படுகின்றது.

தொடரில் அதீத திறமையை வெளிப்படுத்திய பந்துவீச்சாளர்களான டேல் ஸ்டெய்ன், சமுவெல் பத்ரி மற்றும் லசித் மாலிங்க ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர, நெதர்லாந்தின் ஸ்டீபன் மைபேர்க் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பெயரிடப்பட்டுள்ளதுடன், மஹேந்திர சிங் தோனி விக்கெட் காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, ரவிச்சந்திரன் அஸ்வின், தென்னாபிரிக்க அணியின் ஜே.பி டுமினி, அவுஸ்திரேலிய அணியின் கிளென் மெக்ஸ்வெல், மேற்கிந்திய தீவுகளின் டெரன் சமி மற்றும் கிறிஷ்மர் சண்டோகி ஆகியோர் இந்த அணிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்