அயோத்தியில் இராமர் கோயிலை நிர்மாணிக்க நடவடிக்கை ; பா.ஜ.க தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு

அயோத்தியில் இராமர் கோயிலை நிர்மாணிக்க நடவடிக்கை ; பா.ஜ.க தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு

அயோத்தியில் இராமர் கோயிலை நிர்மாணிக்க நடவடிக்கை ; பா.ஜ.க தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2014 | 11:30 am

அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கும் உட்பட்ட வகையில், அயோத்தியில் இராமர் கோயில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

இந்திய மக்களவை தேர்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வெளியிட்டது.

இதில் வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு சேவையாற்றுவதே, தமது கட்சியின் இலக்கு என பாரதீய ஜனதாக கட்சி தெரிவித்துள்ளது.

எந்த நாடும் அச்சுறுத்த முடியாத வகையில், பாதுகாப்பு விடயங்களில் அதிகூடிய கவனம் செலுத்தபடுவதுடன், பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இந்தியா ஒருபோதும் இருக்காதென பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும் எனவும், நிர்வாக முடக்கத்திற்கு முடிவு கொண்டுவருவதாகவும் விஞ்ஞாபனத்தில்  தெரிவிக்கப்படும் அதேவேளை ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று ஆரம்பான தேதர்லுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் 6 தொகுதிகளில் நடைபெற்றது.

அசாமில் 76 சதவீத வாக்குகளும், திரிபுராவில் 85 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்த வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்