1996 உலக சாம்பியனின் நாயகன், 2014 உலக சாம்பியனுக்கு வாழ்த்து (Exclusive)

1996 உலக சாம்பியனின் நாயகன், 2014 உலக சாம்பியனுக்கு வாழ்த்து (Exclusive)

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 9:39 pm

இந்தியாவிற்கு எதிராக உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இருபதுக்கு-20 அணிகளின் தர வரிசையில் இலங்கை முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், நேற்றைய இறுதிப் போட்டி தொடர்பில் 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கிண்ணத்தை கைப்ற்றிய போது தலைவராக செயற்பட்ட அர்ஜூண ரணதுங்க இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

[quote]இந்த போட்டியில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்று, இந்திய அணிக்கு துடுப்பெடுத்தாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமை மிகவும் சிறந்ததொரு செயற்பாடாகவே நான் கருதுகின்றேன். தொடர்ச்சியாக மழையுடன் கூடிய வானிலை நிலவியமையினால், மைதானம் ஈரத் தன்மையில் இருந்ததை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. வீசப்படுகின்ற பந்து சரியான முறையில் செயற்படவில்லை. இந்த தொடரில் குறிப்பாக சங்கக்கார சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடாத பட்சத்திலும், இறுதிப் போட்டியில் இறுதிவரை களத்திலிருந்து துடுப்பெடுத்தாடியமை சிறந்ததாகவே நான் கருதுகின்றேன். மெத்திவ்ஸூக்கு முன்னர் திஸர பெரேராவை துடுப்பெடுத்தாட அனுப்பியமையும் வரவேற்கத்தக்கது. இந்த தீர்மானம் மிகவும் சிறந்ததொரு தீர்மானம். அவ்வாறு அனுப்பப்படுகின்ற நபர் ஆட்டமிழக்கும் பட்சத்தில், பலர் திட்டுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. எனினும், சிறந்த தீர்மானமொன்று எடுக்கப்பட்டது. 130 என்பது மிகப் பெரிய வெற்றியிலக்காக கருதப்படாத பட்சத்திலும், அணி என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து விளையாடியமை வரவேற்கத்தக்கது. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எமது கௌரவத்தை செலுத்துகின்றேன்.[/quote]

 

1996-world-champions-captain-Arjuna-Ranatunga 1009998_10203717893212522_7999475221420082345_n 1996-world-champions


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்