விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய 32 பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்; இந்திய ஊடகங்கள் தகவல்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய 32 பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்; இந்திய ஊடகங்கள் தகவல்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய 32 பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்; இந்திய ஊடகங்கள் தகவல்

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 8:17 pm

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என இலங்கை அரசாங்கத்தினால் பெயரிடப்பட்டுள்ள 422 பேரில், 32 இலங்கையர்கள் தற்போது இந்தியாவில் வசிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 16 அமைப்புக்களுக்கு தடை விதித்ததுடன், அவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் பேண வேண்டாமென இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

மார்ச் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் 422 இலங்கையர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 32 இலங்கையர்கள் தற்போது இந்தியாவில் வசிப்பதாகவும், அவர்களில் 06 பேரின் முகவரிகள் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனையவர்கள் அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மலேஷியா, நெதர்லாந்து, நோர்வே, சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கையில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்