விஜய்யுடன் நடிக்க ‘ஒரு நாளைக்கு ஒரு கோடி’ கேட்கும் தீபிகா

விஜய்யுடன் நடிக்க ‘ஒரு நாளைக்கு ஒரு கோடி’ கேட்கும் தீபிகா

விஜய்யுடன் நடிக்க ‘ஒரு நாளைக்கு ஒரு கோடி’ கேட்கும் தீபிகா

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 2:14 pm

சிம்புதேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்து இதுவரை திட்டவட்டமாக முடிவு எட்டப்படவில்லை.

இந்த திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிப்பார் என முன்னர் கூறப்பட்டபோதும் அவர் திகதி இல்லை என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கோச்சடையான் திரைப்பட நாயகி தீபிகா படுகோனிடம் படக்குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது தீபிகா படுகோனே ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் தீபிகா படுகோனேயை நாயகியாக நடிக்க வைக்க முடியாது என படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

அதையடுத்து, விஜயின் திரைப்படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று நடந்த பரிசீலனையில், வேலாயுதத்தில் விஜய்யுடன் நடித்த ஹன்சிகா, மற்றும் சுறாவில் நடித்த தமன்னா ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் ஒருவர் கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்