வத்தளை பதில் மேயரின் வாகனத்தில் வந்தவர்களின் தாக்குதலில் ஒருவர் காயம்

வத்தளை பதில் மேயரின் வாகனத்தில் வந்தவர்களின் தாக்குதலில் ஒருவர் காயம்

வத்தளை பதில் மேயரின் வாகனத்தில் வந்தவர்களின் தாக்குதலில் ஒருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 6:25 pm

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வத்தளை பகுதியை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

கெப் வாகனமொன்றில் வருகைதந்த இருவரால் குறித்த நபர் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

தாக்குதல் நடத்தியவர்களால், காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வத்தளை பதில் மேயரின் வாகனத்தில் வந்தவர்களே தாக்குதல் மேற்கொண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்